தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 29, 2021, 6:38 AM IST

ETV Bharat / state

ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி: துப்பாக்கிச்சூட்டில் பலியான கிளாஸ்டன் சகோதரி கவலை

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி குறித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாஸ்டனின் சகோதரி கவலை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் பலியான கிளாஸ்டனின் சகோதரி கவலை
துப்பாக்கி சூட்டில் பலியான கிளாஸ்டனின் சகோதரி கவலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாஸ்டனின் சகோதரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி எங்களுக்கு மிகவும் மனக் கவலையைத் தருகிறது. இந்தச் செய்தியால் மக்கள் மனத்தில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும் வேண்டாம் ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் தயாரிக்கப்படும் ஆக்சிஜனும் எங்களுக்கு வேண்டாம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் எங்களுக்கு அனுமதி தர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடு'- உ.பி. அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details