தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 3, 2021, 10:43 PM IST

ETV Bharat / state

டாஸ்மாக் அருகிலேயே போதை மறுவாழ்வு மையம்- சரத்குமார் பேச்சு!

தூத்துக்குடி: சமக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சரத்குமார், சமக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் அருகிலேயே குடியை நிறுத்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

தூத்துக்குடியில் பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமார்
தூத்துக்குடியில் பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமார்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சமக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தரை ஆதரித்து, அண்ணா நகர், பிரையண்ட் நகர், போல்டன் புரம், மில்லர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் அரசியலை வியாபாரமாக கருதாதவர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளோம். எங்களது கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் எளியவர்கள்.

மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயம் இங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். இந்தத் தேர்தல் சிந்தித்து செயல்பட வேண்டிய தேர்தல்.

தூத்துக்குடியில் பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமார்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை ஒரே கட்டமாக மூடி விட முடியுமா என கேட்டால் நிச்சயமாக முடியாது. டாஸ்மாக் கடையை படிப்படியாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறோம். இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் அருகிலேயே, குடி, குடியை கெடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் குடிபோதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தேர்தலை மனதில் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் 7 ரூபாய் 40 காசுகள் பெட்ரோல் விலையை குறைத்து இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் மூலமாக மட்டுமே 13 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் ரூ. 6 ஆயிரம் கோடியை கழித்துவிட்டால், அந்த வருமானத்திற்கு ஈடாக 25 விழுக்காடு டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கலாம்.

தமிழ்நாட்டிற்கு பல நலத் திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். நிச்சயம் இந்த தேர்தல் மூலமாக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்த பண்பான வேட்பாளருக்கு உங்கள் வாக்கை செலுத்த வேண்டும்” என்றார்.

இ்தையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details