தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் இலங்கைக்கு நிவாரணம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருள்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

By

Published : May 28, 2022, 7:01 PM IST

தூத்துக்குடி: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நிவாரண பொருள்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி குடோனுக்கு வரவழைக்கப்பட்டன.

இவைகள் பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருள்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துறைமுகம் அருகில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தார்.

இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 டன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருள்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகிய பொருள்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்தப் பொருள்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் பொருள்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க: பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு; அரசு அலுவலர் பதவியிறக்கம்!

ABOUT THE AUTHOR

...view details