தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி: திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் ஒப்படைத்தார்.

thoothukkudi police
thoothukkudi police

By

Published : Mar 12, 2020, 10:35 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திருட்டு வழக்குகளில் இருந்து நீக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

உரியவரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்கும் காவல்துறை

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் 47 மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார், போக்குவரத்து துறை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கூறுகையில், "மாவட்டம் முழுவதிலும் இதுபோன்று மீட்கப்பட்ட நிலையில் உள்ள மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறும். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம்: 712 எப்ஐஆர்... 200 அக்யூஸ்ட்கள் அரெஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details