தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கல்வித் தேவைக்கும் மாணவர்கள் என்னை நேரில் சந்திக்கலாம்’ -  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்

தூத்துக்குடி: கல்வி சார்ந்த எந்த தேவைக்கும் மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஹரி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஹரி
மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஹரி

By

Published : Feb 20, 2021, 10:27 PM IST

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்த கல்வி புகட்டுவதற்காகவும், போட்டித் தேர்வுகளைத் திறம்பட எதிர்கொள்வதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் திறனாய்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் இணையதளம் மூலமாக தேசிய அளவிலான திறனாய்வு போட்டிக்கு, மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் நாளை (பிப்.21) தேசிய திறனாய்வு போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேசிய திறனாய்வு போட்டியில் பயிற்சி வகுப்பு நிறைவு விழா இன்று (பிப்.20) நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஹரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி முன்னிலை வகித்து பேசினார். இந்த விழாவில் தேசிய திறனாய்வு போட்டி பயிற்சி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஹரி "மாணவர்களுக்கு தயக்கம் என்பது இருக்கக் கூடாது. மாணவ, மாணவிகளின் கல்வி நலனுக்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.

கல்வி சார்ந்து எந்த உதவிக்கும் மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் என்னை வந்து தாராளமாக சந்திக்கலாம்” எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திறனாய்வு போட்டி தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு கூட அனுமதிச் சீட்டு வழங்கி வாழ்த்தினார்.

இதையும் படிங்க:தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details