தமிழ்நாட்டில் மீன்பிடி தடை அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள வேம்பார் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.
யாஷ் புயல் எதிரொலி: வேப்பேரியில் விசைப்படகு சேதம்
தூத்துக்குடி: வேம்பாரில் வீசிய பலத்த காற்றால் விசைப்படகு ஒன்று தூண்டில் பாலத்தில் மோதி சேதமடைந்தது.
படகு
இந்நிலையில் யாஷ் புயல் காரணமாக நேற்று (மே.25) இரவு வீசிய பலத்த காற்றில் வேம்பார் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று நங்கூரம் அறுந்து தூண்டில் பாலத்தில் மோதி சேதமடைந்தது.
இதனையடுத்து படகின் உரிமையாளர் அசோகன் நேரில் சென்று அதனைப் பார்வையிட்டார். சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாயாக இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.