தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 25, 2019, 7:44 AM IST

Updated : Apr 25, 2019, 9:38 AM IST

ETV Bharat / state

திமுகவிலிருந்து பில்லா ஜெகன் நீக்கம்

பில்லா

2019-04-25 07:41:21

தூத்துக்குடி: தம்பியை சுட்டுக்கொன்ற திமுக பிரமுகர் பில்லா ஜெகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சின்ன கடைத்தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் இவரது தம்பி சிம்சனுக்கும் குடும்ப சொத்தைப் பிரித்துக்கொள்வதில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. அதன்படி கடந்த 22ஆம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

அப்போது ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் பில்லா ஜெகனை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.  

Last Updated : Apr 25, 2019, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details