தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி அரசியல் செய்யும் ஸ்டாலின், மக்களை சந்திக்கத் தயாரா? - குஷ்பூ குற்றச்சாட்டு

தூத்துக்குடி: ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி சாதியினரை வேட்பாளராக நிற்க வைத்து, சாதி அரசியல் செய்யும் ஸ்டாலின் பாஜகவினரைப் பார்த்து மத அரசியல் செய்வதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது என நடிகை குஷ்பூ குற்றம்சாட்டினார்.

kusbhoo
kusbhoo

By

Published : Dec 7, 2020, 1:59 PM IST

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் மாநிலம் முழுவதும் முருகனின் ஆறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் யாத்திரை நிகழ்வு முடிவுற்ற நிலையில், இதன் நிறைவு விழா திருச்செந்தூர் கோயில் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன் மற்றும் பாஜக துணை தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, "திருச்செந்தூரில் கூடிய கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். காசு கொடுத்து கூடிய கூட்டம் இல்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக கை காட்டும் நபர் முதலமைச்சராக அமர்வார். வேல் யாத்திரை நிறைவு விழாவுக்கு வர இருந்தவர்களை கைது செய்த காவல் துறையின் நடவடிக்கை வருந்தத்தக்கது" என்றார்.

பின்னர் பேசிய நடிகை குஷ்பூ, "வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாதி அரசியலை விட்டுவிட்டு மக்களைச் சந்தித்து களம் காணத் தயாரா? அவருக்கு சவால் விடுக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி சாதியினரை வேட்பாளராக நிற்க வைத்து சாதி அரசியல் செய்யும் ஸ்டாலின் பாஜகவினரை பார்த்து மத அரசியல் செய்வதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது" என குற்றம்சாட்டினார்.

சாதி அரசியல் செய்யும் ஸ்டாலின், மக்களை சந்திக்கத் தயாரா?

இதையும் படிங்க:ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னால் பாஜக இருக்கிறதா? எல்.முருகன் அளித்த பதில்!

ABOUT THE AUTHOR

...view details