தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளம் பகுதியில் நீரில் மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்!

தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்த மழையால், விளாத்திகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் மானாவரி விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

By

Published : Dec 5, 2020, 8:32 PM IST

2 thousand acres of crops submerged in water in Vilathikulam area
விளாத்திகுளம் பகுதியில் நீரில் மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்

தூத்துக்குடி:புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாள்களாக மழைபெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பல பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியுள்ளன.

நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்த்து கண்ணீர் விடும் விவசாயி

மேலும், ஓடைகளிலும் தண்ணீர் அதிகளவில் வெறியேறி விளைநிலங்களில் புகுந்து விளைநிலங்களில் தண்ணீர் கடல் போலத் தேங்கி நிற்கிறது.

மக்காச்ளோம், மல்லி, உளுந்து, பாசி, கம்பு, சின்ன வெங்காயம், பருத்தி, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய பயிர்கள்

இதையும் படிங்க:புரெவி புயல்: பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details