தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி: கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 1,500 கிலோ பீடி இலைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1500-kg-beedi-leafs-seized-by-thoothukudi-police
1500-kg-beedi-leafs-seized-by-thoothukudi-police

By

Published : Dec 15, 2019, 11:31 PM IST

Updated : Dec 16, 2019, 4:35 AM IST

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே, பட்டினமருதூர் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் தருவைகுளம் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் மூடை ஒன்றுக்கு 30 கிலோ வீதம் 50 மூடைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. பீடி இலைகளை தூத்துக்குடியில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு கடத்தமுயன்ற 1500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

இதில் சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சந்திரசேகர்(வயது 32) , லாரி உதவியாளர் சிலுவைப்பட்டி அழகாபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் (52) மற்றும் லாரியில் இருந்த இருதயவாஸ் (41), ரீகன் (38), பாஸ்கர் (29), ராசாகுட்டி (44), கார்த்தி (36), இன்பேண்ட் (29), விஜயகுமார் (42) உள்ளிட்ட 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1590 கிலோ பீடி இலைகளும், மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Last Updated : Dec 16, 2019, 4:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details