சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான டோல்கேட்டுகளை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
சாலை வரியை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம்!
திருவாரூர்: சாலை வரியை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Truck owners protest to repeal road tax
இந்தப் போராட்டத்தில், காலாவதியான டோல் கேட்டுகளை மூடவேண்டும், வாகன புதுப்பிப்பு உள்ளிட்ட ஆர்.டி.ஓ அலுவலகம் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிக்க ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும், வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.