தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2020, 6:14 PM IST

ETV Bharat / state

முடிவுற்ற சுய ஊரடங்கு; பொருள்களை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

திருவாரூர்: தமிழ்நாட்டில் சுய ஊரடங்கு உத்தரவு முடிந்த நிலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்
இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்

கரோனா வைரஸ் பரவும் அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்குக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று சுய ஊரடங்கு நடைபெற்று முடிந்தது.

சுய ஊரடங்கில், திருவாரூர் நகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய வணிக வளாகங்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இயல்பு நிலைக்குத் திரும்பிய திருவாரூர்

இந்த சுய ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி அளவில் முடிவுற்ற நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், இந்த உத்தரவானது வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை தொடரும் எனவும், அதை மீறி வணிகர்கள் தங்களின் கடைகளை அரசு விதிகளை மீறி திறந்து வைத்தால் சீல் வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பாக ஒலிப்பெருக்கி முலம் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details