தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

நன்னிலம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின, உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
விவசாயிகள் கோரிக்கை

By

Published : Jan 9, 2022, 12:44 PM IST

திருவாரூர்: கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக குடவாசல் அருகே பத்தூர், ஆர்ப்பாவூர், திருக்களப்பூர், செல்லூர், இலையூர், கமுகக்குடி, கீழப்பாலூர், வளவநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள், மழை நீர் வடியாததால் அழுகும் நிலையில் முளைக்க தொடங்கிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையே இதுவரை வழங்கப்படாத நிலையில், தற்பொழுது 10 நாள்களுக்குள் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு: வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை!

ABOUT THE AUTHOR

...view details