தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை'

பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் வறுமையிலும் அரசியலுக்கு வரவும் ஜெயிக்கவும் முடியும் என்று திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற மக்களின் வேட்பாளர் மாரிமுத்து
மாபெரும் வெற்றி பெற்ற மக்களின் வேட்பாளர் மாரிமுத்து

By

Published : May 2, 2021, 5:17 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வெற்றிவாகை சூடியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து 30 ஆயிரத்து 58 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் மொத்தம் 97 ஆயிரத்து 82 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 67 ஆயிரத்து 24 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்துவின் வெற்றி வெகுஜன மக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

காரவீடு இல்லை.. கார் இல்லை.. கையிருப்பில் காசும் இல்லை..

கூலித்தொழிலாளியான இவர் குடிசை வீடு, கையிருப்பில் 3 ஆயிரம் ரூயாய் பணம், வங்கி கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் இருப்பு, மனைவியின் கையிருப்பில் ஆயிரம் ரூபாய் பணம், மூன்று பவுன் தங்கம் இதைதான் தனது சொத்து மதிப்பாக விருப்ப மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

1994ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் ஆன இவர், அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறி தற்போது திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.

அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு இவர் உத்வேகம்

பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் வறுமையிலும் அரசியலுக்கு வர முடியும் குறிப்பாக ஜெயிக்கவும் முடியும் என்பதை மாரிமுத்து நிரூபித்து காட்டியுள்ளார் ‌. இதன் மூலம் இவர் அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு உற்சாகமாய் உருவெடுத்துள்ளார்.

மக்களின் மனங்களை வென்ற மாரிமுத்து:

கஜா புயலின் போது சேதமடைந்த பல வீடுகளில் இவரது வீடும் ஒன்று. அப்போது அரசாங்கமும் சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து முதல்கட்டமாக 18 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர முன்வந்தது. அந்த லிஸ்டில் காடுவாகுடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் பெயர் இல்லை. அவர் ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்பதற்கு உடனே தனக்கு கிடைத்த வாய்ப்பை அவருக்காக விட்டுக்கொடுத்து இன்றளவும் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாசில்லா மாரிமுத்து. பலருது மனங்களை ஈர்த்த மாரிமுத்து இந்த தேர்தலில் வாக்குகளையும் இந்த தேர்தலில் மக்களின் மனங்களையும் வென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details