தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா..!

திருவாரூர்: நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

By

Published : Sep 28, 2019, 9:25 AM IST

Published : Sep 28, 2019, 9:25 AM IST

central university convocation

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையின் செயலர் ரேணு ஸ்வரூப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாய உற்பத்தி பெருக்கத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும், இந்திய விவசாயத்தில் பெரும் உயரத்தை எட்டுவதற்கு நமது விஞ்ஞானிகள் உறுதுணையாக உள்ளனர் என்றும், அதேபோல் மாணவர்களும் புதுமையான படைப்புகளைக் கண்டுபிடித்து வருகின்றனர் என்றும் கூறினார். பருவநிலை செயலியைக் கொண்டு தட்பவெப்ப மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 619 மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் துணைவேந்தர் தாஸ், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details