திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கு ஏதுவாக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆய்வுக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆனந்த் தெரிவித்ததாவது, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1984 மாற்றுதிறனுடைய வாக்காளர்களும், அத்துடன் நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி ஆகிய தொகுதிகள் சேர்த்து 1,760 மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க சிறப்பு ஏற்படுகள் - திருவாரூர் ஆய்வுக்கூட்டத்தில் தகவல்
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேர்தல் சிறப்பு பார்வையாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வரும்போது வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்களிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மடக்கு சக்கர நாற்காலி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளதாகவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆனந்த் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.