நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த நாற்பது நாள்களுக்கு மேலாக பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் தங்களது கடைகளை திறக்கமுடியால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூரில் முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற எந்த கடைகளையும் திறக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நாங்கள் கடந்த 40 நாள்களாக கடையை திறக்காமல் அரசின் உத்தரவை மதித்து வீட்டிலேயே முடங்கி இருந்தோம்.