தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருவாரூர்: போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவிட்டுள்ளார்.

காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்
காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

By

Published : Dec 26, 2019, 9:17 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக அய்யாசாமி (33) என்பவர் பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், குடும்ப பிரச்னை காரணமாக நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரிப்பதற்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காவலர் அய்யாசாமி, செந்தில்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். தொடர்ந்து காவலர் அய்யாசாமி சிறுமியிடம் விசாரணை செய்வதுபோல், பாலியல் வரம்புமீறல் செய்ததாகக் கூறப்படுகிறது.

காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவலர் அய்யாசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, காவலர் அய்யாசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details