தமிழ்நாட்டில் விவசாயிகளை பாதுகாத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது, "கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசை சந்தையை அவசரம் கருதி திறக்கப்பட்டது பாராட்டுக்குரியது. இதன் மூலம் நோய் தொற்று குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தற்க்காலிகமாக அமைக்கப்பட்ட சந்தையில் 200 கடைகள் மட்டுமே உள்ளன. இதனால் 20 விழுக்காடு விற்பனை மட்டுமே நடந்து வருகிறது. காய்கறி, பழம் வகைகள் மற்றும் மலர் விற்பனை முற்றிலும் முடங்கி விட்டது.
இதனால் உற்பத்தி பொருட்கள் முழுவதும் வயல் வெளிகளிலேயே அழிய தொடங்கியதால் விவசாயிகள் பறி தவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சென்னை மாநகரத்தில் சில்லரை வியாபாரிகள் பல மடங்கு விலையை உயர்த்தியும் விற்பனை செய்து பொதுமக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள்.
கடந்த மாதம் பெய்த பெரும் மழை காற்றால் தான் கோயம்பேடு சந்தையில் தீவிர நோய் தொற்று ஏற்ப்பட்டது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே பாதிப்பின் உண்மை நிலையை உணர்ந்து முதலமைச்சர் அவர்கள் மறு பரிசீலினை செய்திட வேண்டுகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிவைத்த திருவாரூர் விவசாயிகள்!