திருவாரூர் சட்டப்பேரவைமற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் 18 சட்டபேரவைஇடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் திருவாரூர் சட்டப்பேரவைஇடைத்தேர்தலில் போட்டியிட வருவாய் கோட்ட அலுவலரும் தேர்தல் அலுவலருமான முருகதாசிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.