தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 13, 2020, 4:04 PM IST

ETV Bharat / state

'தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில்தான் அதிமுக உள்ளது' - அமைச்சர் காமராஜ்!

திருவாரூர்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில்தான் அதிமுக உள்ளது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூன்றாம் சேத்தி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ மாணவிகள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என எண்ணி தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.

தற்கொலைகள் மனவருத்தத்தை அளிக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் மக்களை கைக்கழுவி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து வாய் தவறிக் கூறிய கருத்து. கரோனாவை தடுக்க மக்கள் அனைவரும் கைகளை கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைதான் அவர் வாய் தவறி அப்படி கூறிவிட்டார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

ஓரிரு மாதங்களில் அதிமுக ஆட்சி முடியும் என பலர் கூறி வரும் நிலையில், நான்கு ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நிலைத்துவருகிறது. இன்னும் எட்டு மாதங்கள் அல்ல 80 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிமுக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில்தான் உள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதைதான் நானும் கூறவிரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தக் கடன்களும் நிறுத்தப்பவில்லை' - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details