தமிழ்நாடு

tamil nadu

நன்னிலத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெற்றி!

By

Published : May 3, 2021, 3:26 PM IST

திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி சான்றிதழ் பெற்றுக்கொண்டார்.

ஆர்.காமராஜ்
நன்னிலத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெற்றி!

தமிழ்நாட்டில் நேற்று (மே.2) சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

நன்னிலத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெற்றி!

இதில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான ஜோதிராமனை விட 4 ஆயிரத்து 500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து அவர் நன்னிலம் தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபனிடம் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

ABOUT THE AUTHOR

...view details