தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி நேரத்தில் சாலைப் பிரச்னைக்கு தீர்வு - ஊராட்சித் தலைவருக்கு மக்கள் நன்றி

திருவாரூர்: சேறும் சகதியுமாக காட்சியளித்த சாலையை, ஒரு மணி நேரத்தில் உரிய அலுவலர்களைத் தொடர்புகொண்டு சீரமைத்த ஊராட்சிமன்றத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

dmk precedent  ஒரு மணி நேரத்தில் சாலைப் பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊராட்சி மன்றத் தலைவர்  திருவாரூர் மாவட்டச் செய்திகள்  அக்கர கோமல் சாலைப் பிரச்னையை தீர்த்த ஊராட்சி மன்றத் தலைவர்  கோமல் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார்
ஒரு மணி நேரத்தில் சாலைப் பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊராட்சி மன்றத் தலைவர்

By

Published : Jan 7, 2020, 11:24 PM IST

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சிக்குட்பட்ட அக்கர கோமல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் பிரதான சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் நடைபெற்றுவருகின்றன.

இதனால், சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பள்ளி மாணவர்கள், பெண்கள், வேலைக்குச் செல்பவர்கள் ஆகியோர் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சிமன்றத் தலைவரிடம் முறையிட்டனர். உடனடியாக ஊராட்சிமன்றத் தலைவர் செந்தில்குமார், துறைசார்ந்த அலுவலர்களையும் காவல் துறையினரையும் அழைத்து மக்கள் பிரச்னை குறித்து எடுத்துரைத்தார்.

ஒரு மணி நேரத்தில் சாலைப் பிரச்னைக்கு தீர்வு கண்ட ஊராட்சிமன்றத் தலைவர்

இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் சீரற்ற சாலையை தற்காலிகமாக சீரமைத்துக் கொடுத்தனர். ஒரு மணி நேரத்தில் சாலை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சிமன்ற தலைவருக்கும், அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:‘யார் வெற்றிபெற்றது என்பதில் குழப்பம்’ - மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details