தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினி கூறிய கருத்து தான் தமிழ்நாட்டின் தற்போதைய தேவை' - ஹெச்.ராஜா

திருவாரூர்: அரசியலில் நிலவும் பணபலம், சாதி ஆதிக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுமென ரஜினி கூறிய கருத்து தான் தமிழ்நாட்டிற்குத் தற்போது தேவை என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

h.raja
h.raja

By

Published : Mar 14, 2020, 9:45 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் திட்டமிட்டு, இஸ்லாமியர்களை போராட்டம் நடத்த தூண்டி விட்டனர். இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் ஆதாரத்தோடு எடுத்து கூறிவிட்டார். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் 20 விழுக்காடு இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை வாங்க 80 விழுக்காடு இந்துக்களின் ஆதரவை இழந்து வருகின்றன.

போராடுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள், தவறான வழிகாட்டுதலுக்குச் சென்றுவிட வேண்டாம்; பெரும்பான்மைச் சமுதாயத்தையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கோவை தாராபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற தாக்குதல் சம்பவங்களால் இஸ்லாமியர் சமுதாயத்தின் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை திமுக, காங்கிரஸ் கட்சியினர் தான் தூண்டிவிட்டனர் என்பதை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ரஜினியை ஆதரித்து பேசிய ஹெச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க போகிறாரா, இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் அரசியலில் பணபலம், சாதி ஆதிக்கம் ஆகியவை அகற்றப்பட வேண்டும். தூய்மை, நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தான் தமிழ்நாட்டிற்குத் தற்போது தேவை" என்றார்.

இதையும் படிங்க:கடத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்... சாதி மறுப்புத் திருமணத்தில் திடீர் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details