தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: உரிமையாளர் மனு!

திருவாரூர்: போலி ஆவணம் மூலம் தனது நிலத்தை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

நில உரிமையாளர்
நில உரிமையாளர்

By

Published : Nov 5, 2020, 4:40 PM IST

திருவாரூர் மாவட்டம் சிமிழியைச் சேர்ந்த இந்துமதி என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "நானும், எனது தனது கணவரும் சிமிழியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தோம்.

அந்த நிலத்தின் பட்டா, பத்திரம் எங்களிடம் உள்ளது. ஆனால், எங்கள் பகுதியைச் சேர்ந்த கிராம பணியாளர் சீனிவாசன் (55) என்பவர் அதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, 1998ஆம் ஆண்டு ரூபாய் 5 லட்சத்திற்கு பாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்றுள்ளார்.

எங்கள் நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது 3 மாதங்களுக்கு முன்பு, பத்திரப் பதிவு அலுவலகம் சென்றிருந்தபோதுதான் தெரியவந்தது. எனவே சீனிவாசன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், இதேபோல சீனிவாசன் பல்வேறு நிலங்களை விற்பனை செய்து வருகிறார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை- நிலமோசடி புகார்; எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகன் கால அவகாசம் கேட்டு மனு!

ABOUT THE AUTHOR

...view details