தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 21, 2020, 3:45 PM IST

திருவாரூர் மாவட்டம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏஐடியுசி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசு தலைமை வகித்தார்.

அப்போது அவர்கள் மீனவர்களையும் மீன்பிடித் தொழிலையும் அழிக்கும் தேசிய மீன்வள கொள்கை 2020-ஐ ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதில் தமிழ்நாடு ஏஐடியூசி மீனவர் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி - விஜய் வசந்த் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details