இது குறித்து திருமக்கோட்டை விவசாய அணியின் தலைவர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலேயே மிகப் பெரிய ஏரியாக திகழ்ந்து வருவது மன்னார்குடி திருமகோட்டை ஏரி. சுமார் 768-ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி திருமகோட்டை, வல்லூர், பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை, மகாராஜபுரம், இளவனூர், செங்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீராதாரத்தை பூர்த்தி செய்தும் விவசாயிகளுக்கும் பயன்பட்டுவந்தது.
ஆனால் தற்போது இந்த ஏரியை பல்வேறு தரப்பினரும் ஆக்கிரமித்து வருகின்றனர். குறிப்பாக அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்கள் வைத்துள்ள நபர்களாலும், மீன் குட்டைகள் வைத்துள்ள நபர்களாலும், அரசாங்கத்தால் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இலவசமனை அனுபவித்துவரும் நபர்களாலும், திருமேனியின் ஏரி நீர்நிலை பகுதிகள் முழுவதும் பெரும் பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.