திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள காட்டூர் பள்ளிவாரமங்கலம், பவித்திரமாணிக்கம், இளவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை, சம்பா சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஓடம்போக்கியாற்றிலிருந்து பிரியும் ராஜன் வாய்க்காலைத்தான் வடிகால் வாய்க்காலாக இந்தப் பகுதி விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் ராஜன் வாய்க்காலுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தடுப்பணையானது தற்போது முற்றிலுமாகச் சேதமடைந்து தண்ணீர் வடிவதற்கான வாய்ப்பு இல்லாமல் காணப்படுகிறது.
இதனால் மழைக்காலங்களில் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் தண்ணீரில் மூழ்கும் இடர் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 3000 ஹெக்டேர் விளை நிலங்கள் தரிசாக மாறும் அவலம்!