திருவாரூர் மாவட்டம், பழைய நாகை சாலைப் பகுதியைச் சுற்றி பள்ளிகள், கோயில்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலைகளில் ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் சாக்கடை நீர் புகுந்துள்ளது. இதனால், பெண்களும், குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர்; தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!
திருவாரூர்: சாக்கடை நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம், திருவாரூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
சாக்கடை நீர்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கழிவுநீர் தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. சாக்கடைக் கழிவால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிர் பலி நேர்ந்தால்தான் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை?" என்று வேதனை தெரிவித்தார்.