தமிழ்நாடு

tamil nadu

சிஏஏவுக்கு எதிராக முத்துப்பேட்டையில் 12ஆவது நாள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர்: முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் 12ஆவது நாள் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

By

Published : Feb 27, 2020, 1:01 PM IST

Published : Feb 27, 2020, 1:01 PM IST

Delhi issue sdpi protest
Delhi issue sdpi protest

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் 12ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டும், டார்ச் லைட் அடித்தும் மத்திய அரசுக்கு நூதன எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

இதேபோல், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், டெல்லி காவல் துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்... ரஜினிகாந்த் எங்கே?- என். ராம் கேள்வி.

ABOUT THE AUTHOR

...view details