சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்ட்டா பகுதியை பாதுக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்
மேலும், முதலமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு எனவும், அதனை வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டுகள் மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் என அமைச்சரவை கூட்டத்திலும், அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மத்திய அரசின் ஒப்புதலுடன் காவிரி டெல்ட்டா பாதுக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக காவிரி டெல்ட்டாவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்படப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து