திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இன்று 18ஆம் நாளான காத்திருப்புப் போராட்டத்தில் முத்துப்பேட்டை ஷாஹின் பாக் போராட்டக் குழு, திருவாரூர் ஸ்ரீ வெங்கடேஸ்வர் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஷாஹின் பாக் போராட்டக் குழு தலைவர் ஜெர்மன் அலி தலைமை தாங்கினார்.
காத்திருப்பு போராட்டத்தில் ரத்த தானம் செய்த இஸ்லாமியர்கள்
திருவாரூர் : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்க்கு எதிரான 18 நாள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் ரத்த தானம் செய்தனர்.
caa against protest blood donate
இந்த முகாமில் ஆண்கள் பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் ரத்த தானம் வழங்கினர். மேலும், வருகின்ற ஒன்பதாம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:கோவில்பட்டி துணை சேர்மன் பதவிக்கு தேர்தல் நடத்த உத்தரவு!