தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேவையிலும் தானத்திலும் சிறந்தது மனித உயிரை காக்கும் ரத்த தானமே..! - பி.ஆர். பாண்டியன்

மன்னார்குடி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தார்.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்

By

Published : Oct 17, 2021, 6:23 PM IST

திருவாரூர்: மன்னார்குடி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர்..

தமிழ்ச் சங்கம் அனைத்து பகுதிகளிலும் உருவாக வேண்டும்

’உலகத்தில் தமிழின் பெருமை பாரம்பரியம் கலாச்சாரத்திற்கு இணைவேறு ஏதும் இல்லை.என்கிற நிலை உருவாகி உள்ளது. அதற்கு ஆதாரமாக அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கக்கூடிய சான்றுகள் ஆவணமாக உள்ளது. இதனால் உலகத்தில் தமிழ் சிறப்புற்று விளங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ச் சங்கம் அனைத்து பகுதிகளும் உருவாகக்கூடிய தேவை ஏற்பட்டுள்ளது.

பி.ஆர் பாண்டியன்

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் தமிழ் சங்க விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தன்னை தமிழர் என்று அடையாளப்படுத்தி கொள்வதால் உலகமே பெருமைப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழின் பெருமை சிறப்பு உலகளாவி இருக்கிறது.

ரத்ததானம் அவசியம் செய்ய வேண்டும்

இந்நிலையில் தமிழ் சங்கமே இன்றைக்கு பல உயிர்களைப் பாதுகாக்க கூடிய வகையில் ரத்ததானம் அவசியம் என்பதை உணர்த்துவதற்காக இம்முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக உலகத்தில் மனித பெருக்கத்தை விட நோயின் பெருக்கம் அதிகமாகி உள்ளது. மருத்துவர்கள் கூட நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னரே உயிரிழக்கக்கூடிய அளவில் நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது.

இதற்கு அடிப்படை காரணம் நாம் உட்கொள்ளும் உணவே நஞ்சாக்கி விட்டது. இன்றைய வாழ்க்கை முறையில் நம்முடைய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாக அமைந்து விட்டது. மனித வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.

கரோனா தாக்குதலுக்கு பிறகு மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் நஞ்சில்லா உணவு உண்ணுவதின் மூலம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் வாழ முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பி.ஆர் பாண்டியன்

பாதிப்பின் விளைவு மருத்துவ தேவைகளும் அதிகரித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக ரத்த தானம் என்பது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகவும் பல உயிர்களை பாதுகாக்கக்கூடிய அடிப்படையாகவும் ரத்ததானம் விளங்குகிறது சேவையில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இரத்த தானம் வழங்கும் உடற்தகுதி பெரும்பகுதியானவர்களுக்கு இல்லாத நிலை அச்சமளிக்கிறது. இந்திலையில் இங்கு 20க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் அளிக்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. அவர்களை வணங்கி வாழ்த்துகிறோம்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தமிழ் அறிஞர் பெருமக்கள், ஆசிரியை ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 100-திற்க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details