தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2019, 8:17 PM IST

ETV Bharat / state

மனநலம் பாதித்த சிறுவனுக்காக  அமைக்கப்பட்ட வேலியை அகற்றிய போலீசின் அடாவடி!

திருவாரூர்: மன்னார்குடி அருகே சொந்த இடத்தில் வேலி அமைத்ததற்கு, புகாரின்றி, ஒரு தரப்புக்கு ஆதரவாக வேலியை அகற்றி காவல்துறையினர் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

kannaki
kannaki

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வடுவூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பையன். இவரது மகன் புஷ்பநாதன் (எ) முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். அவருக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும் அஜய் ( 10 ), யோகேஷ் (8) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இருவரில் யோகேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களின் வீட்டை ஒட்டி ஆற்று வாய்க்கால் அமைந்துள்ளது.

நிலத்தை மீட்டுத்தரக்கோரும் பாதிக்கப்பட்ட பெண்

சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட யோகேஷ் வாய்க்காலில் தவறிவிழுந்து தத்தளித்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாதுகாக்க முருகேசன் மனைவி கண்ணகி வீட்டின் அருகே வேலி அமைத்துள்ளார்.

இவர்களின் சொந்த இடத்தில் அமைந்துள்ள பாதையை அருகில் குடியிருக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

கண்ணகி வேலி அமைத்து பாதையை அடைத்ததால் அவர்கள் காவல்நிலையத்தில் முறையாக புகார் அளிக்காமல் காவலர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வேலி வைக்கக் கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கபட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தற்காலிக தடை உத்தரவை வாங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் சங்கரன் தலைமையிலான காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டி வேலியை அகற்றியதாகவும், மனவளர்ச்சி குன்றிய மகனை வீட்டிற்குள்ளேயே கட்டிவைத்து வளர்க்குமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை உயர் அலுவலர்களும், நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணகி வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எங்களை வெளியே போக சொல்றான்' - மகன் குறித்து காவல் துறையிடம் புகாரளித்த பெற்றோர்கள்!

ABOUT THE AUTHOR

...view details