தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 30ஆவது இடத்தை பிடித்த திருவாரூர்!

திருவாரூர் : பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், திருவாரூர் மாவட்டம் 80.52 விழுக்காடு தேர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 30ஆவது இடத்தை பிடித்துள்ளது.

12ஆம் வகுப்பு

By

Published : Apr 19, 2019, 10:47 PM IST

தமிழ்நாட்டில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் திருவாரூர் மாவட்டம் 80.52 விழுக்காடு தேர்ச்சி பெற்றது. திருவாரூரில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை 6068 மாணவர்களும், 8152 மாணவிகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 220 பேர் தேர்வு எழுதினர்.

இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 4914 மாணவர்கள், 7389 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 303 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தத்தில் 80.52 விழுக்காடு தேர்ச்சி பெற்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி விழுக்காடு 1.03% அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழக அளவில் மாணவர்கள் தேர்ச்சியில் 30ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் இதே 30ஆவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details