தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருவாரூரில் குணமடைந்த 8 கரோனா நோயாளிகள்' - அமைச்சர் காமராஜ் மகிழ்ச்சி

திருவாரூர்: மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுடைய 8 நபர்கள் குணமடைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அமைச்சர் காமராஜ் மகிழ்ச்சி
அமைச்சர் காமராஜ் மகிழ்ச்சி

By

Published : Apr 19, 2020, 5:08 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அமைச்சர் காமராஜ் மகிழ்ச்சி

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான 1000 ரூபாய் பணம், அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் 98 விழுக்காடு பேருக்கு ரூ. 1000 பணம் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா ரேஷன் பொருட்களை 91 விழுக்காடு பேர் பெற்றுள்ளனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 21 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், அதில் 8 நபர்கள் குணமடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது" இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் நரிக்குறவர் சமூகம்: தனிக்கவனம் செலுத்துமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details