திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தொற்றும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். இந்த நோய் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நீர், காற்று மூலமாகப் பரவுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு தமிழ்நாடு முழுவதும், கோமாரி தடுப்பூசி முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி மருந்துவ முகாம் தொடங்கியது. கிராம வாரியாகத் தொர்ந்து 21 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.