தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெ. பிறந்தநாளில் அம்மன் பாடலுக்கு ஆடி காண்போரை மெய்சிலிர்க்கவைத்த பெண்கள்!

திருவண்ணாமலை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் அம்மன் பாடலுக்கு பெண்கள் ஆடியது மெய்சிலிர்க்கவைத்தது.

Thiruvannamalai Jayalaitha 72 Birthday Celebration Jayalaitha 72 Birthday Celebration Polur Jayalaitha 72 Birthday Celebration திருவண்ணாமலை ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழா ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழா போளூர் ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழா
Thiruvannamalai Jayalaitha 72 Birthday Celebration

By

Published : Feb 28, 2020, 8:22 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சாலையில் உள்ள அம்மா இல்லத்தில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பெருமாள் நகர் கே. ராஜன் கலந்துகொண்டு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே, காலை முதல் இரவு வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாமி ஆடும் பெண்கள்

இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் செல்வராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி பாடல்கள் பாடப்பட்டன. இந்தப் பாடலின்போது ஏராளமான பெண்கள் மேடையின் முன்பாகவும் கூட்டத்தின் நடுவிலும் ஆடிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:கானக உயிர்களை காண ஒரு பயணம்....வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

ABOUT THE AUTHOR

...view details