திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிமை தாஸ் (55), தங்கம் (60), அந்தோணி (35 ).
இதில், மகிமை தாஸ், தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் தேவிகாபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊரான தச்சாம்பாடி கிராமத்திற்குச் செல்ல நேற்று காத்திருந்தனர்.
போளூர் டிராக்டர் - பைக் மோதி விபத்து அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி இரு சக்கர வாகனத்தில் தேவிகாபுரம் சென்று விட்டு தச்சாம்பாடி நோக்கி அவ்வழியாகச் சென்றுள்ளார். அவரிடம் ஞானப்பிரகாசமும், மகிமை தாஸும் லிஃப்ட் கேட்டு வாகனத்தில் ஏறியுள்ளனர்.
சுபாஷ் சந்திரா ராஜினாமா.!
முத்தாலம்மன் நகர் அருகே செல்லும்போது செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற டிராக்டரை இவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
மகிமைதாஸ், ஞானப்பிரகாசம் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த அந்தோணி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பிரேதத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சேத்துப்பட்டு காவல் நிலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.