திருவண்ணாமலை:அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தர்காவில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக தர்காவில் சிறப்பு தொழுகை
தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று தமிழ்மகன் உசேன் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.
Etv Bharat
அப்போது மாவட்டச் செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் சேவூர் ராமச்சந்திரன், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் 8ஆம் நாள் நவராத்திரி விழா