தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2021, 3:32 PM IST

ETV Bharat / state

7ஆம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா: பஞ்சமூர்த்திகள் தேரில் வலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 ஆம் நாள் உற்சவமான இன்று (நவ.16) அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா வந்தன.

Karthika Deepam  Karthika Deepam festival  seventh day of Karthika Deepam festival  thiruvannamalai news  thiruvannalai latest news  திருவண்ணாமலை செய்திகள்  கார்த்திகை தீபத் திருவிழா  கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள்  கார்த்திகை தீபம்
பஞ்சமூர்த்திகள்

திருவண்ணாமலை:அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் 7 ஆம் நாள் உற்சவமான இன்று (நவ.16) விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள், தேரில் உலா வந்தன.

பஞ்சமூர்த்திகள் தேர் பவனி

ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் நாள், பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் தேரில் வலம் வருவனர். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணத்தால் மாடவீதியில் தேர் ஓட்டமின்றி, கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தன.

மேலும் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட தீபத்திருவிழாவில், கடந்த் ஆறு நாள்களாக கலையும் மாலையும், ஐந்தாம் பிராகரத்தில் பவனி வந்து, பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்து வந்தன. இந்நிலையில் ஏழாம் நாளான இன்றும் (நவ.16) அதேபோல் ஐந்தாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

கடந்த ஆண்டும் இதே போல் மாட வீதியில் தேர் வீதி உலா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் தீபத் திருவிழா வருகிற நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் திருக்கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையும் படிங்க: MK Stalin : ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்; சாலைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details