திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் வண்ண கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் போளூர் குன்னத்தூர் சாலை எஸ்.எம்.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் துணை மேலாளர்கள் கணேசன், விஜயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சுகாசினி, அரசு அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். செங்குணம் கிராம பகுதியில் 22.88 ஹெக்டேர் பரப்பளவுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் இந்த வண்ண கிரானைட் அமைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் குவாரிக்கான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுமக்கள், ''மலையில் வெடி வைப்பதால் வீட்டு சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்தக் குவாரி அமைக்கக் கூடாது'' என்று தெரிவித்தனர். மேலும் தாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகளை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுவது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் செங்குணம் கிராமத்தில் வண்ண கிரானைட் குவாரிக்கான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க: ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு!