திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 60 சென்ட் அரசு தரிசு நிலத்தில் இயற்கை காடு உருவாக்க 5000 மரக் கன்றுகள், மியாவாக்கி முறையில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.
தரிசு நிலத்தில் பசுமையான காடுகளை உருவாக்கத் திட்டம்!
திருவண்ணாமலை: வடஆளப்பிறந்தான் மலைப் பகுதியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மரகன்றுகள் மியாவாக்கி முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடப்பட்டது.
மரக்கன்று நடும் ஆட்சியர்
இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 750க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.