தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

63 நாயன்மார்களை பல்லக்கில் சுமந்து சென்ற பள்ளி மாணவர்கள்!

திருவண்ணாமலை : 63 நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் பல்லக்கில் சுமந்து, மாட வீதி உலா சென்றனர்.

naayanmar 63 students tiruvannamala
naayanmar 63 students tiruvannamala

By

Published : Dec 6, 2019, 9:49 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் ஆறாம் நாளான இன்று காலையில், 63 நாயன்மார்களின் பல்லக்கை பள்ளி மாணவர்கள் சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

முன்னதாக விநாயகர், சந்திரசேகரர், அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவபெருமானுக்கு தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர், கண்ணப்ப நாயனார், சிறு தொண்டு நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.

பல்லக்கில் சுமந்து சென்று மாட வீதி உலா

56 ஆண்டுகளாகத் தொடந்து நடைபெற்று வரும் இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்களை சுமந்து கொண்டு, மாட வீதி உலா வருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர்கள் 63 நாயன்மார்களை சுமந்து மாட வீதியுலா வந்தனர்.

இதனைத் தொடந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதையும் படிங்க:

பஞ்ச ரதங்கள் தேரோட்டம்: மாட வீதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details