திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை முழுவதும் ஏராளமான மலைக்காடுகள் இருக்கின்றன. இந்த மலைக்காடுகளில் விலைமதிப்புள்ள மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதை சில சமூக விரோதிகள் வனத் துறையினர் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று அரியவகை, விலை மதிப்புள்ள மரங்களை வெட்டி, செங்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மரபட்டறைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அரியவகை மரங்களை வெட்டி கடத்தியவர் கைது!
திருவண்ணாமலை: செங்கம் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்திய நபரை வனத் துறையினர் கைது செய்தனர்.
வனப்பகுதியில் வெட்டி கடத்தப்படும் மரங்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் மரக்கடை உரிமையாளர்களும் அதிகளவில் வாங்கி மரங்களை பதுக்கிவைத்து அதிக லாபத்திற்கு கட்டில் சோபா ஜன்னல் நாற்காலி போன்ற பொருள்களை செய்து அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், செங்கம் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள மரபட்டறையில் நாற்பதுக்கும் மேற்பட்ட அதிக விலையுள்ள மரங்களை டாட்டா ஏசி வாகனம் மூலம் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செங்கம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், மரங்களை பதுக்கிவைத்திருந்த நபரை கைது செய்தனர். மேலும், மரபட்டறையிலிருந்து கண்துடைப்புக்காக சில மரங்களை மட்டுமே பறிமுதல் செய்து அதை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர்.