தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் லால் சலாம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலையார் கோயிலில் ரஜினிகாந்த்!

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று அண்ணாமலையார் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Lal salaam Shooting in Tiruvannamalai Actor Rajinikanth darshan at Annamalaiyar temple
அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்

By

Published : Jul 1, 2023, 11:15 AM IST

Updated : Jul 1, 2023, 11:47 AM IST

அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்

திருவண்ணாமலை:நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் பூஜை உடன் தொடங்கியது. பின்னர் மும்பை, புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து நாட்ளாக திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று செஞ்சி பகுதியில் லால் சலாம் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க: Maamannan Box Office: வெளியான முதல் நாளே வசூலை வாரிக் குவித்த மாமன்னன்

இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அப்போது அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் என வெளிவந்த தகவல் பக்தர்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க பக்தர்கள் வருகை புரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் மற்றும் கோயில் ஊழியர்களின் பாதுகாப்புடன் அண்ணாமலையார் கோயிலில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏறி நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் 2003ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து இருந்தார். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலைக்கு படப்பிடிப்பிற்காக வந்த அவர், அண்ணாமலையாரை தரிசனம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இதையும் படிங்க: உலகளவில் ‘போர் தொழில்’ பட வசூல் எவ்வளவு? - விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல்!

Last Updated : Jul 1, 2023, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details