தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்து வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

திருவண்ணாமலை: சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக 74 மரக்கன்றுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி நட்டு வைத்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

By

Published : Aug 15, 2020, 8:00 PM IST

திருவண்ணாமலையை அடுத்துள்ள நொச்சிமலை ஊராட்சிக்கு உட்பட்ட வாணியந்தாங்கள் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி என்கிற ஏழுமலை இன்று (ஆகஸ்ட்.15) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். சுமார் 10 வகையான 74 மரக்கன்றுகளை இவர் சமூக அக்கறையுடனும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நட்டு வைத்தார். நாவல், புங்கன், வேம்பு, புளியமரம், கொய்யா, காட்டு நெல்லி, உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகளைச் சாலையின் இருபுறமும் ஆடு, மாடுகள் மேயாத வகையில் பாதுகாப்பு வளையங்களுடன் நடப்பட்டது.

மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மழை மற்றும் தூய காற்று வருங்கால சந்ததியினர் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டதாக, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details