தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Karthigai Deepam Festival: அண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம்

திருவண்ணாமலை ‌அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 63 அடி தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம்

By

Published : Nov 10, 2021, 6:13 PM IST

திருவண்ணாமலை: ‌பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவ கோலம்

அண்ணாமலையார் சந்நிதி அருகே 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டு, விருச்சிக லக்கினத்தில் காலை 06.45 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்கியது.

இன்று முதல் 10 நாட்கள் காலை, மாலை என இருவேளைகளும் திருக்கோயிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா உற்சவம் நடைபெறும்.

விருச்சிக லக்ன வேளையில் ஏற்றப்பட்ட கொடி

கரோனா தொற்று காரணமாக கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது.

நிறைவு நாளான பத்தாம் நாள் நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை ஆலய பிரகாரம்

இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம்

கரொனா தொற்று காரணமாக பெரிய அளவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மணவாழ்க்கையைத் தொடங்கிய மலாலா

ABOUT THE AUTHOR

...view details