திருவண்ணாமலை:இந்தியாவின் மிகப்பெரிய வறுமை ஒழிப்பில் பங்காற்றிக் கொண்டிருக்கும் திட்டமாக மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வறுமையில் இருந்து மீண்டு வருகிறார்கள்.
தற்போது அனைத்துப்பொருட்களின் விலையும் 300 மடங்கு அளவிற்கு உயர்ந்து உள்ளதால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், அதேபோல் ரூ.270 என கொடுக்கப்படும் கூலியை 300 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயி சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.