தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி வீடு சூறைக்காற்றால் சேதம்: நிவாரணப் பொருள்கள் வழங்கிய எம்எல்ஏ!

திருவண்ணாமலை: கொல்லக் கொட்டாய் பகுதியில் சூறைக்காற்றால் விவசாயியின் வீடு சேதமடைந்தது. இதையடுத்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ. கிரி நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

விவசாயி வீடு சூறைக்காற்றால் சேதம்; திமுக கிரி நிவாரணப் பொருள் வழங்கல்
விவசாயி வீடு சூறைக்காற்றால் சேதம்; திமுக கிரி நிவாரணப் பொருள் வழங்கல்

By

Published : May 30, 2020, 9:28 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோட்டாங்கல் கொல்லக் கொட்டாய் பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி சிவா என்பவரின் வீடு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்தது.

மேலும், வீட்டிலிருந்த பண்ட பாத்திரங்கள், துணிகள் முழுவதும் காற்றில் தூக்கிவீசப்பட்டு கடுமையான சேதம் ஏற்பட்டது.

சேதம் அடைந்த வீடு

பின்னர் தகவலறிந்த செங்கம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ. கிரி பாதிக்கப்பட்ட சிவா வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவர் குடும்பத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைத் தொகுப்பினை வழங்கினார்.

சிவாவின் சேதம் அடைந்த வீடு

மேலும் அந்தக் குடும்பத்திற்கு அரசு மூலம் இலவச கான்கிரீட் வீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சூரைக்காற்றால் வீடு சேதமடைந்தது எனத் தகவல் தெரிவித்தும் வட்டாட்சியர் உள்ளிட்ட மற்ற அலுவலர்கள்என யாரும் வரவில்லை என்று மு.பெ.கிரியிடம் சிவா புகார் அளித்தார்.

இதையும் படிங்க:மக்கள் வரிப்பணத்தில் அதிமுக அரசியல் நாடகம்: அமைச்சர் காமராஜுக்கு எ.வ. வேலு பதிலடி

ABOUT THE AUTHOR

...view details